இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இராஜயோக தியானம்-4 முற்றிலும் அமைதியில் ஆழ்ந்திருக்க கற்று கொள்ளுங்கள். நல்ல ஒரு அமைதி தன்னை ஒரு ஆத்மா எனவும் பரம்பொருள் பரமாத்மா தன் தந்தை எனவும் அறியும் போது ஏற்படும். தியானம் என்றாலே தன்னையும் பரமாத்மாவையும் புரிந்து இருப்பது ஆகும். எந்த ஒன்றையும் நாம் நன்றாக புரிந்திருக்கும் போது நமது புத்தி நன்றாக செயல்படுகிறது. நமது மனம் அமைதியில் இருக்கும் போதே நமது புத்தி நன்றாக செயல்படும்.
நமது உணர்வுகள் எதுவானலும் நம் கண்கள் அந்த உணர்வுகளை காட்டிவிடும். நமது உணர்வுகள் ஒருபோதும் புதை உண்டிருக்காது. வாழ்வில் நல்ல தகுதிகளை அடைய விரும்பினால் மனம் புத்தியை இறைவனிடம் குவிக்க கற்று கொள்ள வேண்டும். மற்றும் தேவையற்ற எண்ணங்களை தடுத்து நிறுத்தும் சக்தி வேண்டும். நமது கவனம் இறைவன் மீது இல்லாது இருந்தால் நாம் எம்மதத்தை சார்ந்தவராக இருப்பினும் நமது மனம் அமைதியாக இருக்காது.
அதன் விளைவாக நாம் கவலைப்பட நேரும். சந்தோஷம் இராது.
நமது விருப்பம் ஒன்று மனம் புத்தியை இறைவனிடம் குவிப்பதாக இருக்கட்டும் இரண்டாவது நமது வாழ்வின் முக்கியத்துவத்தை கண்டு கொண்டவராக இருக்க வேண்டும். இறைவன் நம் வாழ்வில் எதை விரும்புகிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமைதியின்றி இவ்வுலகில் வலம் வர நாம் இவ்வாழ்கையை எடுத்து கொள்ள வில்லை. வாழ்வின் நோக்கமே அமைதியாக மகிழ்ச்சியாக சிரித்து வாழ்வதற்கே என உணர வேண்டும். மற்றவர்களும் அப்படி இருக்க இடம் தர வேண்டும். சுய நலமின்றி நமது சந்தோசத்தையும் அமைதியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சுய நலம் நம்மிடம் இருந்தால் தற்காலிக சந்தோசத்தையே உணர முடியும் மற்றவர்களுக்கு நாம் தரும் சந்தோசமும் தற்காலிகமானதாகவே ஆகிவிடும். மற்றவருக்கு ஒத்துழையுங்கள் ஆனால் சுய நலம் அதில் இருக்க கூடாது. நம் வாழ்வை பார்த்து மற்றவர்கள் நல் வாழ்வைகற்று கொள்ளட்டும். மற்றவர்களுக்கு தரும் இந்த உபகாரமே நல்ல கர்மம் ஆகும். என் ஆன்மீக உடன் பிறப்புகளே நல்ல கர்மம் செய்ய இராஜயோக தியானம் கற்க வாருங்கள்.
ஓம் சாந்தி
2 comments:
Ayya,excellent postings...I am also the same name as yours...I am proud of that...
Please teach your valuable things to all...Please give your contact number or mail id to post my doubts and questions...
Thank you..
M.Murugesan
//அமைதியின்றி இவ்வுலகில் வலம் வர நாம் இவ்வாழ்கையை எடுத்து கொள்ள வில்லை. வாழ்வின் நோக்கமே அமைதியாக மகிழ்ச்சியாக சிரித்து வாழ்வதற்கே என உணர வேண்டும். மற்றவர்களும் அப்படி இருக்க இடம் தர வேண்டும். சுய நலமின்றி நமது சந்தோசத்தையும் அமைதியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சுய நலம் நம்மிடம் இருந்தால் தற்காலிக சந்தோசத்தையே உணர முடியும் மற்றவர்களுக்கு நாம் தரும் சந்தோசமும் தற்காலிகமானதாகவே ஆகிவிடும். மற்றவருக்கு ஒத்துழையுங்கள் ஆனால் சுய நலம் அதில் இருக்க கூடாது. நம் வாழ்வை பார்த்து மற்றவர்கள் நல் வாழ்வைகற்று கொள்ளட்டும்.//
சிறப்பான வரிகள். பாராட்டுக்கள் பெரியவரே !
Post a Comment