Saturday, January 9, 2010

கர்ம விதி






மனித ஆத்மா இந்த கர்ம சேத்திரத்தில் சரீரம் எடுத்து பிறந்து விட்டாலே கட்டாயம் கர்மத்தில் ஒவ்வொருவரும் வராமல் இருக்க முடியாது. இது உலக நாடக விதி.

முதல் பிறவி என்பது ஆத்ம லோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி சரீரம் எடுப்பது தான். ஒரு முறை பூமிக்கு பிறந்து வந்து விட்டால் மீண்டும் ஆத்மா ஆத்ம லோகத்திற்கு திரும்ப செல்லும் வரை இங்கேயே பிறப்பு - இறப்பு என்ற சக்கரத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆத்ம லோகத்திலிருந்து வரும் ஒவ்வொரு ஆத்மாவும்
தூய்மையாகவே வருகிறது. பிறப்பு - இறப்பு சக்கரத்தில் வரும்போது தூய்மை இழந்து விடுகிறது.

தூய்மையாக ஆத்மா இருந்த போது வாழ்வில் சுகம், சாந்தி, ஆனந்தம் இருந்தது. அமைதியான மனம் ... தெய்வீகமான புத்தி இருந்தது. அதனால் ஆத்மா செய்யும் கர்மம் தர்மம் நிறைந்ததாக இருந்தது. சத்யுகத்தில் திரேதாயுகத்தில் ஆத்மா செய்த கர்மத்திற்கு அகர்மா எனக் கூறுகிறோம். அதாவது அக்கர்மத்திற்கு லாபம் இல்லை, நஷ்டம் இல்லை. கர்ம பயனாக துன்பம் அடையவில்லை. காரணம் அனைவரும் உடல் நினைவு இல்லாது ஆத்ம நினைவில் இருந்தனர். ஆத்ம உணர்வுக்கு கிடைத்த பரிசு அது.
பின்னர் ஆத்மா துவாபர் கலியுகத்தில் பிறப்பு}இறப்பில் வரும் போது ஆத்ம உணர்வில் இருந்தவர் மெல்ல மெல்ல உடல் உணர்வுக்கு வர தொடங்கினர். உடல் உணர்வில் ஆத்மா செய்யும் கர்மம் விகர்மம் என்கிறோம். அதாவது லாபம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நஷ்டமே நஷ்டம் தான். அதனால் கர்ம பயனாக வாழ்வில் துக்கம், அசாந்தி, நோய், அகால மரணம், விபத்து போன்ற துன்பத்திற்கு ஆளாகிறது. மனிதன் அமைதியை தேடி இறைவனை வழிபடுகிறான், பக்தி செய்கிறான் ... முக்தி கிடைக்கவில்லை. பலநாள் பக்தியின் பலனை தர பரமாத்மா இறைவன் பூமிக்கு மனித உடலை ஆதாரமாக எடுத்து அவர் வாய் மூலம் இறைவன் தனது அறிமுகத்தை தானே கூறுகிறார். அக்காலத்தையே
கலியுக முடிவு - சத்யுக ஆரம்பம் இரண்டும் சந்திக்கும் காலம் புருஷோத்தம சங்கம் யுக காலம் ஆகும்.

புருஷோத்தம சங்கமயுக காலத்தில் பரமாத்மா அளித்த ஞானம் - தியானம் மூலம் ஆத்மா செய்யும் கர்மம் சுகர்மம் என்கிறோம். இக்கர்மத்திற்கு ஒன்றிற்கு பல லட்சம் மடங்கு லாபம் கிடைக்கிறது. அதாவது 21 பிறவிக்கான சொர்க்க வாழ்வை பிறப்புரிமையாக பெறும் காலம் புருஷோத்தம சங்கம யுக காலம். இப்போது அக்காலம் நடந்து கொண்டு இருக்கிறது.

தன்னையே ஆத்மா என உணர்ந்து பரமாத்மா இறைவனையும் ஒரு ஒளிப்புள்ளி ஆத்மாவாக உணர்ந்து அனைத்து சம்பந்தங்களும் அந்த ஒரு இறைவனிடம் வைத்து கர்மம் செய்பவரே ஞானியாக, யோகியாக விளங்க முடியும். பரமாத்மா நினைவில் இருந்து செய்யும் கர்மமே சுகர்மம். சுகர்மம் செய்யும் பருவம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்போது சுகர்மம் செய்யவில்லை எனில் எப்போதும் சுகர்மம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து இப்போதே ஞானி } யோகி ஆக இத் தொடரை தொடர்ந்து படியுங்கள் வாழ்வில் கடைபிடியுங்கள் என வாழ்த்தும் சகோதர ஆத்மா ...

ஓம் சாந்தி

Thursday, January 7, 2010

இறைவனை அறிவோம்.




நம்மை நாம் அறிந்த பின்னரே நம்மால் இறைவனை அறிய முடியும். இவ்வுலகில் இறைவனைப் பற்றிய நம்பிக்கை விதவிதமாக உள்ளது. தாம் அறிந்த வழியில் இறைவனை மனிதர்கள் புரிந்து இருக்கிறார்கள். உண்மையில் இறைவனை எப்படி, எவ்வாறு, என்னவாக இருக்கிறாரோ அப்படியே இப்போது புரியவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.இறைவனைப் பற்றிய சரியான புரிதல் வர இறைவன் அவரைப்பற்றி அவரே கூறும் போது தான் இது சாத்தியம் ஆகும்.


இறைவன் இருக்கிறார் என்பதில் நம்பிக்கையே இல்லாத பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் மனிதரைப் போல இறைவனை கண்மூலம் பார்க்கவில்லை. கண்ணில் பார்க்கவில்லை என்பதற்காக இறைவன் இல்லை என கூற முடியாது. கண்ணில் பார்க்க முடியவில்லை என்றாலும் வீசும் தென்றலை நம்மால் உணர முடிகிறது. அதே போல் இறைவன் இருப்பதை தெய்வீக ஞானம், ஆழ்ந்த தியானம் மூலம் நம்மால் உணர முடியும்.
யார் இறைவன்


இறைவன் யார் அவர் பெயர் என்ன அவர் உருவம் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது. இறைவன் அதாவது பரம் ஆத்மா யார் என்பதை புரிந்து கொள்ள முதலில் நாம் முயற்சி செய்ய வேண்டும். பரம் ஆத்மா என்ற சொல்லில் இருந்தே அவர் அனைத்து ஆத்மாக்களுக்கெல்லாம் மேலானவர் என்பதை நம்மால்ó புரிந்து கொள்ள முடிகிறது. அவரும் நம்மை போன்று ஒரு ஆத்மாவே எல்லா ஆத்மாக்களுக்கும் தாயாக, தந்தையாக,ஆசானாக, சத்குருவாக இருக்கிறார். ஆனால் அவருக்கு தாய், தந்தை ஆசான் குரு என எவரும் இல்லை.

இறைவனின் உருவம்.

பார்வைக்கு எட்டாத புலப்படாத அணுவினும் பன் மடங்கு சிறிய புள்ளி ஒளியே அவரது உருவம் ஆகும். இந்த உருவத்தை நாம் ஆழ்ந்த தியானத்தில் தான் பார்த்து உணர முடியும். அவர் நிகராமானவர் அதாவது தனக்கென ஒரு சரீரத்தை பெற்று கொள்ளாதவர். அவர் மனிதர் அல்ல, மனித உருவத்தில் இருப்பவரும் அல்ல. மனிதனை óபோல் இன்ப துன்பத்திற்கு ஆட்படாதவர்.


இறைவனின் குணம்.

இறைவன் படைப்பவராக அனைத்து குணங்களின் கடலாக விளங்குகிறார். அன்பு, ஆனந்தம், அமைதி, சாந்தி கருணை,ஞானம், தூய்மை இவைகளில் கடலுக்கு ஒப்பான குணம் கொண்டவர்.இறைவன் அவர் சத்தியமானவர். சர்வ சக்தியும் அதிகாரமும் படைத்தவர். அவரே எல்லா குணங்களின் பாதுகாவலனாக எல்லா தீய குணங்களை அழிப்பவராக இருக்கிறார். அவர் விடுதலை அளிப்பவர்.. வழிகாட்டி... விமோசனம் தருபவர். ஆகவே அவரே சத்குருவாக மிளிர்கிறார். துக்கத்தை நீக்கி சுத்தை தருகிறார்.


நாம் இறைவனின் பெயர், உருவம்,குணம் பற்றி தெரிந்து கொண்டோம். அவர் இருப்பிடம், அவரை மனித உலகில் சந்திக்கும் காலம், அவர் ஆற்றும் அரும் பணிகள் என்ன என்பதை அடுத்து வரும் தொடரில் காண்போம்.

வலையுலக நண்பர்கள் ஐயம் தெளிவுபெற ஒம்ஷந்திமுருகேசன்@ஜிமெயில்.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Monday, January 4, 2010

நம்மை நாம் அறிவோம்.




நாம் யார் ... என்னவாக இருக்கிறோம் .... நம்மை கண்டு கொள்வது எப்படி ... நமது எண்ணங்கள், உணர்வுகள் எப்படி உடலோடு பின்னி பிணைக்கப் பட்டிருக்கிறது ... நமது எண்ணங்களை சக்திசாலி ஆக்குவது எப்படி ... நமது எண்ணங்கள் வருகிறது, போகிறது அவைகளை ஒழுங்குபடுத்துவது, புரிந்து கொள்வது எப்படி ... விலை மதிப்பற்ற வாழ்வை அனுபவிப்பது எப்படி .. அமைதி ஆனந்தம் நிறைந்த வாழ்வை அமைத்து கொள்வது எப்படி ... இது போன்ற விசயங்களுக்கு விடை காண நம்மை நாம் அறிய வேண்டும்.

ஆத்மா - உடல் :

மனித உடல் பெதீக சக்திகளின் உருவாக்கம் ஆகும். - இளமை, அறுவறுப்பு - அழகு, ஆண் - விதவித படிகளே பெதீக சக்தியாகும். அணுக்களின் கூட்டமைப்பே உடல் உறுப்புகள். ஐந்து தத்துவத்தால் உருவான உடல் எப்படி இருப்பினும் இதை இயக்கும் ஒரு அபூர்வ பெதீகமற்ற சக்தியே ஆத்மா எனும் புள்ளி ஜோதியாகும். உடல் ஜடம். ஆத்மா -உயிர் சக்தியாகும்.

நாம் என்ன :

நாம் உயிருள்ள, உடலுக்கு அப்பாற்பட்ட ஆத்ம ஜோதி. ஐம்புலன்கள் உள்ள உடலிலிருந்து தனித்து நிற்கும் ஆத்மஜோதி நாம். உடலில் கண்கள் இருக்கிறது. அக் கண்கள் மூலம் பார்க்கும் ஆத்மா நாம். காதுகள் மூலம் கேட்கும் ஆத்மா நாம். வாய் மூலம் பேசும் ஆத்மா நாம். என்றும் உள்ள அழிவற்ற ஆத்மா தான் நாமாக இருக்கிறோம்.

உடல் அழியக் கூடியது.

உடல் மூலம் கர்மத்தை செய்ய வைப்பதும், கர்மத்தின் பயனை அனுபவிப்பதும் ஆத்மாவாகிய நாம் தான்.

உடல் என்ற காருக்கு ஓட்டுநராக இருக்கும் ஆத்மா தான் நாம். ஆத்மா உடலைவிட்டு பிரிந்து விட்டால் உடல் ஒரு சவம் தான். பின் உடலை எரித்து விடுகிறார்கள். ஆத்மா பிரிந்த பிறகு உடல் பயனற்றதாகி விடுகிறது.

ஆத்ம ஜோதி :

ஆத்மா உயிருள்ளது ஏனெனில் அதனால் யோசிக்க முடியும்; இன்ப துன்பத்தை, அமைதி ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். - தீய செயலை செய்ய முடியும். மனம், புத்தி, சம்ஸ்காரம் என்ற முப்பெரும் சக்தி படைத்ததுதான் ஆத்மா.

சிந்திக்கும் சக்திதான் மனம். மனதால் கற்பனை செய்ய முடியும். அதனால் யோசித்து திட்டத்தை தீட்ட முடியும். மனம் என்பது பெதீக பொருளான இருதயம் அல்ல. அது ஆத்மாவின் சக்தியாகும். எண்ணங்களை பிறப்பிக்கும்.

எண்ணங்களை வகைப்படுத்தி அவற்றை புரிந்து கொண்டு செயல்படுத்தலாமா, வேண்டாமா என முடிவெடுக்கும் சக்திதான் புத்தி ஆகும். புத்தி என்பது பெதீக பொருளான மூளை அல்ல. அது ஆத்மாவின் பகுத்தறியும் தீர்மானிக்கும் சக்தியாகும்.

ஆத்மாவின் கடந்த கால அனுபவங்கள் செயல்களின் பதிவே சம்ஸ்காரம் ஆகும். பழக்கம், திறமை, ஆளுமை, நம்பிக்கை இவை சம்ஸ்காரத்தின் மறு உருவங்கள் ஆகும். என்ன பதிவு செய்கிறோமோ அது ஆத்மாவில் அப்படியே நிலைத்து விடுகிறது. ஆத்மாவின் தனித்தன்மை என்பது சம்ஸ்காரத்தை பொறுத்தே அமைகிறது. குறைகள் சிறப்பு குணங்கள் இவை தனித் தன்மையில் வருகிறது. ஒவ்வொரு செயலும் சம்ஸ்காரத்தை படைக்கிறது.

உடலில் ஆத்மா வாசம் செய்யும் இடம் :

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கண், காது, மூக்கு, வாய், மெய் எனும் ஐம் பொறிகள் முகத்தில் தான் உள்ளது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், பேசுதல், - இக் காரியங்களை ஆத்மா இந்த ஐம் பொறிகள் மூலமே செய்ய வேண்டி இருக்கிறது.
செய்விப்பவராக இருக்கும் ஆத்மா இக் காரியங்களை செய்ய முகத்தில் தான் வாசம் செய்ய வேண்டி இருக்கிறது. சரியாக கூறவேண்டுமானால் ஆத்மா முகத்தில் இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி பொட்டு உள்ள இடத்தில் தான் வாசம் செய்கிறது. உடல் முழுவதையும் ஆத்மா இங்கிருந்தபடியே தான் இயக்குகிறது.

தன்மைகள் :
அணுவினும் மிக மிக சிறிய கண்ணால் காண முடியாத புள்ளி ஆன்மீக ஒளியே ஆத்மாவாகும். ஆத்மாக்கள் அனைத்தும் அழிவற்றது. அதை உருவாக்கவோ, அழிக்கவோ ஒரு போதும் முடியாது. ஆத்மா ஒவ்வொன்றும் தனித்தனியானது. ஆத்மாவை காண முடியாவிட்டாலும் உணர முடியும். ஆண், பெண் என ஆத்மாவில் பிரிவினை இல்லை.

அன்பு, அமைதி, சந்தோசம், சத்தியம், ஆனந்தம், தூய்மை இவையே ஆத்மாவின் இயல்பான தன்மைகள். தன்னை ஆத்மா என உணரும் போது இத்தன்மைகள் தானாக வெளிப்படும். இதையே ஆன்ம உணர்வு என்கிறோம்.

உடல் உணர்வில் நாம் வரும் போது உலகில் காணப்படும் எல்லா தீய தன்மைகளும் நம்மிடம் இருந்து வெளிப்படுகிறது. அது தனக்கும் மற்றவர்க்கும் துன்பத்தை தருகிறது.

ஆத்ம உணர்வில் நாம் இருந்து விட்டால் அது தனக்கும் மற்றவர்களுக்கும் இன்பத்தையே தரும். ஆனந்த வாழ்விற்கு சாவியாக இருப்பது ஆத்ம உணர்வே ஆகும்.

கர்மா தத்துவம் :

நமது கர்மத்திற்கு ஏற்பவே நமது ஜென்மம் யஅமைகிறது. வாழ்வில் அவரவர்க்கு என அமைவது எல்லாம் அவரவர் கர்மத்தை பொறுத்தே உள்ளது. எவரும் இந்த கர்மாவில் இருந்து தம்மை விடுவித்து கொள்ள முடியாது. நாம் சந்தோசமாக இருக்க நமது கர்மம் நல்லதாக இருக்க வேண்டும். நம் பாதிப்புக்கு காரணம் நமது தீய கர்மாவே ஆகும். இப்பிறவியிலோ, வரும் பிறவியிலோ வரும் இன்ப, துன்பத்திற்கு காரணமாக இருப்பது நமது கர்மாவே. நாம் கர்ம விதியை மீற இயலாது. ஆகவே ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல் புரிய வேண்டும்.

கர்ம விதியின் அறிவு எனக்கில்லை எனக் கூறி நாம் தப்ப முடியாது. ஆகவே சரியான கர்மம் எது என்ற அறிவை நாம் பெற்றே ஆகவேண்டும். நமது நன்மைக்காகவே சரியான கர்மத்தை நாம் செய்ய வேண்டி உள்ளது. மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக நாம் கர்மம் செய்ய கூடாது.

வெறுப்பு, கோபம், பொய், பேராசை, ஆணவம், இச்சை போன்ற தாக்கத்தின் அடிப்படையில் நமது கர்மம் இருக்க கூடாது. அப்படிப்பட்ட கர்மத்தை தான் தீய கர்மம் எதிர்மறையான கர்மம் என்கிறோம். சமுதாயத்தில் இது பிரிவினையை உண்டாக்கிவிடும்.

அமைதி, அன்பு, இரக்கம், பணிவு, நேர்மை உடன் செய்யும் கர்மமே நல்லதை தரும். சமுதாயத்தில் ஒற்றுமையை உருவாக்கும்.

எண்ணத்தின் சக்தி :

மனிதன் பெற்றுள்ள மிக உயர்ந்த கருவி என்பது எண்ணத்தின் சக்தியாகும். எண்ணம் - உலகை உருவாக்கும் வல்லமை படைத்தது. எண்ணம் அவரவர் பெற்ற அறிவை பொறுத்தே வெளிப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஆதாரம் அவரவர் எண்ணமே. எண்ணத்தின் தகுதிகேற்ப கர்மம் அமைகிறது. கர்மம் நல்ல, கெட்ட விளைவுகளை தருகிறது. இந்த விளைவுகள் மீண்டும் நம் எண்ணத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

சரியான அறிவை ஒட்டியே சரியான எண்ணம் உருவாகி நமக்கு அமைதியான திருப்தியான வாழ்வை தருகிறது. இராஜ யோக தியானம் சரியான எண்ணம் மூலம் சரியான கர்மம் செய்ய உதவியாக இருக்கிறது.

எமது ஆன்மீக உடன் பிறப்புகளே ! சரியான கர்மம் செய்ய இராஜயோக தியானம் கற்க வாருங்கள் .... வளம் பல சேர்த்து கொள்ளுங்கள்.

ஓம் சாந்தி