இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நம்மை நாம் அறிந்த பின்னரே நம்மால் இறைவனை அறிய முடியும். இவ்வுலகில் இறைவனைப் பற்றிய நம்பிக்கை விதவிதமாக உள்ளது. தாம் அறிந்த வழியில் இறைவனை மனிதர்கள் புரிந்து இருக்கிறார்கள். உண்மையில் இறைவனை எப்படி, எவ்வாறு, என்னவாக இருக்கிறாரோ அப்படியே இப்போது புரியவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.இறைவனைப் பற்றிய சரியான புரிதல் வர இறைவன் அவரைப்பற்றி அவரே கூறும் போது தான் இது சாத்தியம் ஆகும்.
இறைவன் இருக்கிறார் என்பதில் நம்பிக்கையே இல்லாத பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் மனிதரைப் போல இறைவனை கண்மூலம் பார்க்கவில்லை. கண்ணில் பார்க்கவில்லை என்பதற்காக இறைவன் இல்லை என கூற முடியாது. கண்ணில் பார்க்க முடியவில்லை என்றாலும் வீசும் தென்றலை நம்மால் உணர முடிகிறது. அதே போல் இறைவன் இருப்பதை தெய்வீக ஞானம், ஆழ்ந்த தியானம் மூலம் நம்மால் உணர முடியும்.
யார் இறைவன்
இறைவன் யார் அவர் பெயர் என்ன அவர் உருவம் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது. இறைவன் அதாவது பரம் ஆத்மா யார் என்பதை புரிந்து கொள்ள முதலில் நாம் முயற்சி செய்ய வேண்டும். பரம் ஆத்மா என்ற சொல்லில் இருந்தே அவர் அனைத்து ஆத்மாக்களுக்கெல்லாம் மேலானவர் என்பதை நம்மால்ó புரிந்து கொள்ள முடிகிறது. அவரும் நம்மை போன்று ஒரு ஆத்மாவே எல்லா ஆத்மாக்களுக்கும் தாயாக, தந்தையாக,ஆசானாக, சத்குருவாக இருக்கிறார். ஆனால் அவருக்கு தாய், தந்தை ஆசான் குரு என எவரும் இல்லை.
இறைவனின் உருவம்.
பார்வைக்கு எட்டாத புலப்படாத அணுவினும் பன் மடங்கு சிறிய புள்ளி ஒளியே அவரது உருவம் ஆகும். இந்த உருவத்தை நாம் ஆழ்ந்த தியானத்தில் தான் பார்த்து உணர முடியும். அவர் நிகராமானவர் அதாவது தனக்கென ஒரு சரீரத்தை பெற்று கொள்ளாதவர். அவர் மனிதர் அல்ல, மனித உருவத்தில் இருப்பவரும் அல்ல. மனிதனை óபோல் இன்ப துன்பத்திற்கு ஆட்படாதவர்.
இறைவனின் குணம்.
இறைவன் படைப்பவராக அனைத்து குணங்களின் கடலாக விளங்குகிறார். அன்பு, ஆனந்தம், அமைதி, சாந்தி கருணை,ஞானம், தூய்மை இவைகளில் கடலுக்கு ஒப்பான குணம் கொண்டவர்.இறைவன் அவர் சத்தியமானவர். சர்வ சக்தியும் அதிகாரமும் படைத்தவர். அவரே எல்லா குணங்களின் பாதுகாவலனாக எல்லா தீய குணங்களை அழிப்பவராக இருக்கிறார். அவர் விடுதலை அளிப்பவர்.. வழிகாட்டி... விமோசனம் தருபவர். ஆகவே அவரே சத்குருவாக மிளிர்கிறார். துக்கத்தை நீக்கி சுத்தை தருகிறார்.
நாம் இறைவனின் பெயர், உருவம்,குணம் பற்றி தெரிந்து கொண்டோம். அவர் இருப்பிடம், அவரை மனித உலகில் சந்திக்கும் காலம், அவர் ஆற்றும் அரும் பணிகள் என்ன என்பதை அடுத்து வரும் தொடரில் காண்போம்.
வலையுலக நண்பர்கள் ஐயம் தெளிவுபெற ஒம்ஷந்திமுருகேசன்@ஜிமெயில்.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment