Saturday, January 9, 2010

கர்ம விதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





மனித ஆத்மா இந்த கர்ம சேத்திரத்தில் சரீரம் எடுத்து பிறந்து விட்டாலே கட்டாயம் கர்மத்தில் ஒவ்வொருவரும் வராமல் இருக்க முடியாது. இது உலக நாடக விதி.

முதல் பிறவி என்பது ஆத்ம லோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி சரீரம் எடுப்பது தான். ஒரு முறை பூமிக்கு பிறந்து வந்து விட்டால் மீண்டும் ஆத்மா ஆத்ம லோகத்திற்கு திரும்ப செல்லும் வரை இங்கேயே பிறப்பு - இறப்பு என்ற சக்கரத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆத்ம லோகத்திலிருந்து வரும் ஒவ்வொரு ஆத்மாவும்
தூய்மையாகவே வருகிறது. பிறப்பு - இறப்பு சக்கரத்தில் வரும்போது தூய்மை இழந்து விடுகிறது.

தூய்மையாக ஆத்மா இருந்த போது வாழ்வில் சுகம், சாந்தி, ஆனந்தம் இருந்தது. அமைதியான மனம் ... தெய்வீகமான புத்தி இருந்தது. அதனால் ஆத்மா செய்யும் கர்மம் தர்மம் நிறைந்ததாக இருந்தது. சத்யுகத்தில் திரேதாயுகத்தில் ஆத்மா செய்த கர்மத்திற்கு அகர்மா எனக் கூறுகிறோம். அதாவது அக்கர்மத்திற்கு லாபம் இல்லை, நஷ்டம் இல்லை. கர்ம பயனாக துன்பம் அடையவில்லை. காரணம் அனைவரும் உடல் நினைவு இல்லாது ஆத்ம நினைவில் இருந்தனர். ஆத்ம உணர்வுக்கு கிடைத்த பரிசு அது.
பின்னர் ஆத்மா துவாபர் கலியுகத்தில் பிறப்பு}இறப்பில் வரும் போது ஆத்ம உணர்வில் இருந்தவர் மெல்ல மெல்ல உடல் உணர்வுக்கு வர தொடங்கினர். உடல் உணர்வில் ஆத்மா செய்யும் கர்மம் விகர்மம் என்கிறோம். அதாவது லாபம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நஷ்டமே நஷ்டம் தான். அதனால் கர்ம பயனாக வாழ்வில் துக்கம், அசாந்தி, நோய், அகால மரணம், விபத்து போன்ற துன்பத்திற்கு ஆளாகிறது. மனிதன் அமைதியை தேடி இறைவனை வழிபடுகிறான், பக்தி செய்கிறான் ... முக்தி கிடைக்கவில்லை. பலநாள் பக்தியின் பலனை தர பரமாத்மா இறைவன் பூமிக்கு மனித உடலை ஆதாரமாக எடுத்து அவர் வாய் மூலம் இறைவன் தனது அறிமுகத்தை தானே கூறுகிறார். அக்காலத்தையே
கலியுக முடிவு - சத்யுக ஆரம்பம் இரண்டும் சந்திக்கும் காலம் புருஷோத்தம சங்கம் யுக காலம் ஆகும்.

புருஷோத்தம சங்கமயுக காலத்தில் பரமாத்மா அளித்த ஞானம் - தியானம் மூலம் ஆத்மா செய்யும் கர்மம் சுகர்மம் என்கிறோம். இக்கர்மத்திற்கு ஒன்றிற்கு பல லட்சம் மடங்கு லாபம் கிடைக்கிறது. அதாவது 21 பிறவிக்கான சொர்க்க வாழ்வை பிறப்புரிமையாக பெறும் காலம் புருஷோத்தம சங்கம யுக காலம். இப்போது அக்காலம் நடந்து கொண்டு இருக்கிறது.

தன்னையே ஆத்மா என உணர்ந்து பரமாத்மா இறைவனையும் ஒரு ஒளிப்புள்ளி ஆத்மாவாக உணர்ந்து அனைத்து சம்பந்தங்களும் அந்த ஒரு இறைவனிடம் வைத்து கர்மம் செய்பவரே ஞானியாக, யோகியாக விளங்க முடியும். பரமாத்மா நினைவில் இருந்து செய்யும் கர்மமே சுகர்மம். சுகர்மம் செய்யும் பருவம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்போது சுகர்மம் செய்யவில்லை எனில் எப்போதும் சுகர்மம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து இப்போதே ஞானி } யோகி ஆக இத் தொடரை தொடர்ந்து படியுங்கள் வாழ்வில் கடைபிடியுங்கள் என வாழ்த்தும் சகோதர ஆத்மா ...

ஓம் சாந்தி

No comments:

Post a Comment