Monday, January 4, 2010

நம்மை நாம் அறிவோம்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



நாம் யார் ... என்னவாக இருக்கிறோம் .... நம்மை கண்டு கொள்வது எப்படி ... நமது எண்ணங்கள், உணர்வுகள் எப்படி உடலோடு பின்னி பிணைக்கப் பட்டிருக்கிறது ... நமது எண்ணங்களை சக்திசாலி ஆக்குவது எப்படி ... நமது எண்ணங்கள் வருகிறது, போகிறது அவைகளை ஒழுங்குபடுத்துவது, புரிந்து கொள்வது எப்படி ... விலை மதிப்பற்ற வாழ்வை அனுபவிப்பது எப்படி .. அமைதி ஆனந்தம் நிறைந்த வாழ்வை அமைத்து கொள்வது எப்படி ... இது போன்ற விசயங்களுக்கு விடை காண நம்மை நாம் அறிய வேண்டும்.

ஆத்மா - உடல் :

மனித உடல் பெதீக சக்திகளின் உருவாக்கம் ஆகும். - இளமை, அறுவறுப்பு - அழகு, ஆண் - விதவித படிகளே பெதீக சக்தியாகும். அணுக்களின் கூட்டமைப்பே உடல் உறுப்புகள். ஐந்து தத்துவத்தால் உருவான உடல் எப்படி இருப்பினும் இதை இயக்கும் ஒரு அபூர்வ பெதீகமற்ற சக்தியே ஆத்மா எனும் புள்ளி ஜோதியாகும். உடல் ஜடம். ஆத்மா -உயிர் சக்தியாகும்.

நாம் என்ன :

நாம் உயிருள்ள, உடலுக்கு அப்பாற்பட்ட ஆத்ம ஜோதி. ஐம்புலன்கள் உள்ள உடலிலிருந்து தனித்து நிற்கும் ஆத்மஜோதி நாம். உடலில் கண்கள் இருக்கிறது. அக் கண்கள் மூலம் பார்க்கும் ஆத்மா நாம். காதுகள் மூலம் கேட்கும் ஆத்மா நாம். வாய் மூலம் பேசும் ஆத்மா நாம். என்றும் உள்ள அழிவற்ற ஆத்மா தான் நாமாக இருக்கிறோம்.

உடல் அழியக் கூடியது.

உடல் மூலம் கர்மத்தை செய்ய வைப்பதும், கர்மத்தின் பயனை அனுபவிப்பதும் ஆத்மாவாகிய நாம் தான்.

உடல் என்ற காருக்கு ஓட்டுநராக இருக்கும் ஆத்மா தான் நாம். ஆத்மா உடலைவிட்டு பிரிந்து விட்டால் உடல் ஒரு சவம் தான். பின் உடலை எரித்து விடுகிறார்கள். ஆத்மா பிரிந்த பிறகு உடல் பயனற்றதாகி விடுகிறது.

ஆத்ம ஜோதி :

ஆத்மா உயிருள்ளது ஏனெனில் அதனால் யோசிக்க முடியும்; இன்ப துன்பத்தை, அமைதி ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். - தீய செயலை செய்ய முடியும். மனம், புத்தி, சம்ஸ்காரம் என்ற முப்பெரும் சக்தி படைத்ததுதான் ஆத்மா.

சிந்திக்கும் சக்திதான் மனம். மனதால் கற்பனை செய்ய முடியும். அதனால் யோசித்து திட்டத்தை தீட்ட முடியும். மனம் என்பது பெதீக பொருளான இருதயம் அல்ல. அது ஆத்மாவின் சக்தியாகும். எண்ணங்களை பிறப்பிக்கும்.

எண்ணங்களை வகைப்படுத்தி அவற்றை புரிந்து கொண்டு செயல்படுத்தலாமா, வேண்டாமா என முடிவெடுக்கும் சக்திதான் புத்தி ஆகும். புத்தி என்பது பெதீக பொருளான மூளை அல்ல. அது ஆத்மாவின் பகுத்தறியும் தீர்மானிக்கும் சக்தியாகும்.

ஆத்மாவின் கடந்த கால அனுபவங்கள் செயல்களின் பதிவே சம்ஸ்காரம் ஆகும். பழக்கம், திறமை, ஆளுமை, நம்பிக்கை இவை சம்ஸ்காரத்தின் மறு உருவங்கள் ஆகும். என்ன பதிவு செய்கிறோமோ அது ஆத்மாவில் அப்படியே நிலைத்து விடுகிறது. ஆத்மாவின் தனித்தன்மை என்பது சம்ஸ்காரத்தை பொறுத்தே அமைகிறது. குறைகள் சிறப்பு குணங்கள் இவை தனித் தன்மையில் வருகிறது. ஒவ்வொரு செயலும் சம்ஸ்காரத்தை படைக்கிறது.

உடலில் ஆத்மா வாசம் செய்யும் இடம் :

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கண், காது, மூக்கு, வாய், மெய் எனும் ஐம் பொறிகள் முகத்தில் தான் உள்ளது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், பேசுதல், - இக் காரியங்களை ஆத்மா இந்த ஐம் பொறிகள் மூலமே செய்ய வேண்டி இருக்கிறது.
செய்விப்பவராக இருக்கும் ஆத்மா இக் காரியங்களை செய்ய முகத்தில் தான் வாசம் செய்ய வேண்டி இருக்கிறது. சரியாக கூறவேண்டுமானால் ஆத்மா முகத்தில் இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி பொட்டு உள்ள இடத்தில் தான் வாசம் செய்கிறது. உடல் முழுவதையும் ஆத்மா இங்கிருந்தபடியே தான் இயக்குகிறது.

தன்மைகள் :
அணுவினும் மிக மிக சிறிய கண்ணால் காண முடியாத புள்ளி ஆன்மீக ஒளியே ஆத்மாவாகும். ஆத்மாக்கள் அனைத்தும் அழிவற்றது. அதை உருவாக்கவோ, அழிக்கவோ ஒரு போதும் முடியாது. ஆத்மா ஒவ்வொன்றும் தனித்தனியானது. ஆத்மாவை காண முடியாவிட்டாலும் உணர முடியும். ஆண், பெண் என ஆத்மாவில் பிரிவினை இல்லை.

அன்பு, அமைதி, சந்தோசம், சத்தியம், ஆனந்தம், தூய்மை இவையே ஆத்மாவின் இயல்பான தன்மைகள். தன்னை ஆத்மா என உணரும் போது இத்தன்மைகள் தானாக வெளிப்படும். இதையே ஆன்ம உணர்வு என்கிறோம்.

உடல் உணர்வில் நாம் வரும் போது உலகில் காணப்படும் எல்லா தீய தன்மைகளும் நம்மிடம் இருந்து வெளிப்படுகிறது. அது தனக்கும் மற்றவர்க்கும் துன்பத்தை தருகிறது.

ஆத்ம உணர்வில் நாம் இருந்து விட்டால் அது தனக்கும் மற்றவர்களுக்கும் இன்பத்தையே தரும். ஆனந்த வாழ்விற்கு சாவியாக இருப்பது ஆத்ம உணர்வே ஆகும்.

கர்மா தத்துவம் :

நமது கர்மத்திற்கு ஏற்பவே நமது ஜென்மம் யஅமைகிறது. வாழ்வில் அவரவர்க்கு என அமைவது எல்லாம் அவரவர் கர்மத்தை பொறுத்தே உள்ளது. எவரும் இந்த கர்மாவில் இருந்து தம்மை விடுவித்து கொள்ள முடியாது. நாம் சந்தோசமாக இருக்க நமது கர்மம் நல்லதாக இருக்க வேண்டும். நம் பாதிப்புக்கு காரணம் நமது தீய கர்மாவே ஆகும். இப்பிறவியிலோ, வரும் பிறவியிலோ வரும் இன்ப, துன்பத்திற்கு காரணமாக இருப்பது நமது கர்மாவே. நாம் கர்ம விதியை மீற இயலாது. ஆகவே ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல் புரிய வேண்டும்.

கர்ம விதியின் அறிவு எனக்கில்லை எனக் கூறி நாம் தப்ப முடியாது. ஆகவே சரியான கர்மம் எது என்ற அறிவை நாம் பெற்றே ஆகவேண்டும். நமது நன்மைக்காகவே சரியான கர்மத்தை நாம் செய்ய வேண்டி உள்ளது. மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக நாம் கர்மம் செய்ய கூடாது.

வெறுப்பு, கோபம், பொய், பேராசை, ஆணவம், இச்சை போன்ற தாக்கத்தின் அடிப்படையில் நமது கர்மம் இருக்க கூடாது. அப்படிப்பட்ட கர்மத்தை தான் தீய கர்மம் எதிர்மறையான கர்மம் என்கிறோம். சமுதாயத்தில் இது பிரிவினையை உண்டாக்கிவிடும்.

அமைதி, அன்பு, இரக்கம், பணிவு, நேர்மை உடன் செய்யும் கர்மமே நல்லதை தரும். சமுதாயத்தில் ஒற்றுமையை உருவாக்கும்.

எண்ணத்தின் சக்தி :

மனிதன் பெற்றுள்ள மிக உயர்ந்த கருவி என்பது எண்ணத்தின் சக்தியாகும். எண்ணம் - உலகை உருவாக்கும் வல்லமை படைத்தது. எண்ணம் அவரவர் பெற்ற அறிவை பொறுத்தே வெளிப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஆதாரம் அவரவர் எண்ணமே. எண்ணத்தின் தகுதிகேற்ப கர்மம் அமைகிறது. கர்மம் நல்ல, கெட்ட விளைவுகளை தருகிறது. இந்த விளைவுகள் மீண்டும் நம் எண்ணத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

சரியான அறிவை ஒட்டியே சரியான எண்ணம் உருவாகி நமக்கு அமைதியான திருப்தியான வாழ்வை தருகிறது. இராஜ யோக தியானம் சரியான எண்ணம் மூலம் சரியான கர்மம் செய்ய உதவியாக இருக்கிறது.

எமது ஆன்மீக உடன் பிறப்புகளே ! சரியான கர்மம் செய்ய இராஜயோக தியானம் கற்க வாருங்கள் .... வளம் பல சேர்த்து கொள்ளுங்கள்.

ஓம் சாந்தி

2 comments:

கோவி.கண்ணன் said...

//கர்மா தத்துவம் :

நமது கர்மத்திற்கு ஏற்பவே நமது ஜென்மம் யஅமைகிறது. வாழ்வில் அவரவர்க்கு என அமைவது எல்லாம் அவரவர் கர்மத்தை பொறுத்தே உள்ளது. எவரும் இந்த கர்மாவில் இருந்து தம்மை விடுவித்து கொள்ள முடியாது. நாம் சந்தோசமாக இருக்க நமது கர்மம் நல்லதாக இருக்க வேண்டும். நம் பாதிப்புக்கு காரணம் நமது தீய கர்மாவே ஆகும். இப்பிறவியிலோ, வரும் பிறவியிலோ வரும் இன்ப, துன்பத்திற்கு காரணமாக இருப்பது நமது கர்மாவே. நாம் கர்ம விதியை மீற இயலாது. ஆகவே ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல் புரிய வேண்டும்.//

கர்மா தத்துவம் லாஜிக் படி சரின்னு சொன்னாலும், ஒருவரின் முதல் பிறவிக்கான கர்மா எதுவுமே கிடையாதே. அதாவது பிறவிச் சுழலில் சிக்குவதற்கு கர்மா தான் காரணம் என்கிறார்கள். என்கிறீர்கள். ஆனால் பிறவிச் சுழலுக்குள் முதன் முறையாக விழுவதற்கு எந்த கர்மாவும் காரணம் இல்லையே. கர்மத்திற்கு ஏற்ப பிறவி அமைகிறது உண்மை என்றால் முதல் பிறவி எந்த கர்மாவின் அடிப்படையில் அமைகிறது ?

SUNDARAN said...

கர்மாவில் நம்மை பிணிப்பது எது? என் நம்மை பிணிக்கிறது? முதல் பிறவிக்கு முன் நான் எங்கிருந்தேன்? அப்போது நான் என்னவாக இருந்தேன்? யாராவது பதில் சொல்லுங்கள் ஐயா!

Post a Comment